குறள்
சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
குறள் விளக்கம்
நாவால் அறியப்படும் சுவை, கண்ணால் காணப்படும் காட்சி, தோலால் நுகரப்படும் தொடு உணர்ச்சி, காதால் அறியப்படும் ஓசை, மூக்கால் நுகரப்படும் மணம் என வரையறுக்கப்பட்ட ஐம்பொறிகள், ஐம்புலன்கள் ஆகியவற்றின் நுண்மையான தன்மைகளை பகுத்தறிந்து உணர்ந்துள்ளவனிடம்தான் உலகப்பொருள்களும் உயிர்களும் கட்டுப்பட்டு அடங்கி நிற்கும்.