குறள்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
குறள் விளக்கம்
மக்கள் செய்வதற்கு (உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்துகின்ற பொறுப்பான) அரிய செயலை செய்கின்றவர்களே உயர்ந்தோர் என்று அறிஞர்களால் போற்றப்படுவர். மக்கள் செய்வதற்கு (உடலையும், உள்ளத்தையும் கட்டுப்படுத்துகின்ற பொறுப்பான) அரிய செயலை ஆர்வத்துடன் மேற்கொள்ளாதவர்கள் அறிஞர்களால் உயர்ந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.