குறள்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு
குறள் விளக்கம்
(மனித உடலில் வாழும்) உயிர் அமைதியில் நிலை பெறுவதானது வேறோர் உயிரின் உடலை உண்ணாதிருக்கும் அறப்பண்பைச் சார்ந்து உள்ளது. (அப்பண்பைப் பின்பற்றாமல்) ஊனை உண்ணுவானேயானால் (அவனை விழுங்கும்) நரகமானது (பின் உமிழ்தற்கு) வாய்திறத்தலைச் செய்யாது. (துன்பங்களிலிருந்து விடுபடவே முடியாது என்பது கருத்து.)