குறள்
இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள
குறள் விளக்கம்
தான் பொருள் இல்லாதவன் என்கின்ற துயர்தரும் சொல்லை (ஏழையொருவன்) சொல்வத்ற்கு (முன்னமேயே தன்னிடமும் பொருள் இல்லை என்று சொல்லாமல்) அன்புடன் வழங்கும் நற்பண்பானது நற்பண்பைப் பரம்பரையாய் வளர்த்துவரும் குலத்தை உடையவனுக்கு தான் (பெரும்பாலும்) இருக்கும்.