Kural

திருக்குறள் #22
குறள்
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
குறள் விளக்கம்
அறிவுப்பூர்வமாக உலக இன்பங்களில் உள்ள ஆசையினை முறைப்படி, பொறுப்புடன் விட்டவர்களது சிறப்பினை வரையறுத்துக்கூற முற்படுவோமேயானால் உலகில் இதுவரை இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போல ஆகும்.