குறள்
அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு
குறள் விளக்கம்
நல்வழியில் அடைந்த பொருளைக் கொண்டு வாழ்வதே நமக்குச் சிறந்த அறம் என்று நன்கு அறிந்து, பிறரது பொருளை அடைய விரும்பாத அறிவு உடையவர்களுடைய தகுதியை உணர்ந்து, செல்வத் திருமகள் அவரிடமே சென்று நிலைத்திருப்பாள்.