Kural

திருக்குறள் #126
குறள்
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து
குறள் விளக்கம்
ஆமையைப் போல மன ஒருமையின் உள்ளிருந்து ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றலை வளர்த்தால் (அது) ஏழுபிறப்பிலும் (உயிருக்குப்) பாதுகாப்பைத் தரும்.
குறள் விளக்கம் - ஒலி