குறள்
செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்
குறள் விளக்கம்
அறிய வேண்டியவற்றை அறிந்து, அறவழியில் வாழ்ந்து கொண்டு அடக்கமாக (ஒருவன்) இருப்பானேயானால் பக்குவம் மிகுந்த அவ்வடக்கப் பண்பானது (நல்லோரால்) அறியப்பட்டு பெருஞ் சிறப்பைப் பெற்றுத் தரும்.