குறள்
கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி
குறள் விளக்கம்
தீவினையால் பொருள் முதலியன கெடுதலும் (பொருள் அழிதலும்), நல்வினையினால் அவை பெருகுதலும் (பொருள் வளர்தலும்), யாவருக்கும் இல்லாதவை அல்ல. (முன்னமே அமைந்து கிடந்தனவாம். அவ்வழியை அறிந்து) மனதில் (அவை காரணமாக) கோணாதிருத்தலே (அதாவது, நடுவுநிலைமை உடைத்திருத்தலே) அழகாம்.