Kural

திருக்குறள் #1079
குறள்
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடிக்காண வற்றாகும் கீழ்
குறள் விளக்கம்
கீழோன் (பிறர் தமது செல்வத்தால்) உடுப்பதையும் உண்பதையும் கண்டால் அவர் மீது (குற்றம் இல்லாத போதும், பொறாமையின் காரணமாக) குற்றத்தைக் காண்பதில் வல்லவனாவான்.