Kural

திருக்குறள் #1061
குறள்
கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்
குறள் விளக்கம்
தம்மிடம் உள்ள பொரூளை மறைக்காது மனமகிழ்வோடு வழங்கும் கண்ணைப் போன்ற சிறந்தவரிடத்திலும் பொருளைக் கேட்காமல் இருத்தல் கோடி மடங்கு உயர்வைத் தரும்.