Kural

திருக்குறள் #1036
குறள்
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டோம்என் பார்க்கும் நிலை
குறள் விளக்கம்
உழுதலைச் செய்பவர் அதனைச் செய்யாமல் கை மடங்கினால் (யாவரும்) விரும்பும் உணவையும் விட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் தம் அறத்தின்கண் நிலைநிற்பது என்பது இயலாது.