Kural

திருக்குறள் #1021
குறள்
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுஉடையது இல்
குறள் விளக்கம்
தன் குடியை உயரச் செய்தற்பொருட்டு எடுத்த காரியத்தைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்ற பெருமையைக் காட்டிலும் ஒருவனுக்கு மேன்மை உடையது வேறொன்றும் இல்லை.