Kural

திருக்குறள் #1020
குறள்
நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று
குறள் விளக்கம்
உள்ளத்தில் நாணம் இல்லாதவருடைய (உயிருடன் இருப்பவர் போன்ற) இயக்கமானது மரத்தால் செய்த பாவையை கயிற்றினால் உயிர் (உடையதைப் போன்று) மயக்கிக் காட்டுவதற்கு ஒப்பாகும்.