Kural

திருக்குறள் #1004
குறள்
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்?
குறள் விளக்கம்
(தன்னிடம் உள்ள பொருளை வழங்காத காரணத்தால்) ஒருவராலும் விரும்பப்படாதவன், (தான் இறந்த பிறகு) எஞ்சியிருப்பது என்று எதனை எண்ணுவானோ?!