Kural

திருக்குறள் #1002
குறள்
பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு
குறள் விளக்கம்
தான் ஈட்டிய பொருளால் அனைத்தும் கிடைக்கும் என்று எண்ணி (உலோபத்தால்) பிறருக்கு அதனை வழங்காமல் பொருள்மீது பற்றுக்கொள்ளும் மயக்கத்தினால் (உயிருக்கு) (துன்பம் மிகுந்த) இழிவான பிறவி உண்டாகும்.