குறள்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
குறள் விளக்கம்
பொழியாமல் மக்களைத் துன்புறுத்துவதும் துயருற்ற மக்களுக்கு உற்ற உறுதுணை புரியும் வண்ணம் பொழிந்து, அதைப் போன்றே துன்பத்தைப் போக்கி இன்பம் அளிப்பதுவும் (போன்ற) அனைத்தையும் (செய்யவல்லது) மழையேயாகும்.