குறள்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி
குறள் விளக்கம்
முன்னேதான் சமனாக நின்று, பின்னே தன்னிடத்து வைத்த பாரத்தை அளவு செய்யும் தராசு போல் நடுவருக்குரிய இலக்கணங்கள் பொருந்தியவராய் (அவையில்) ஒரு பக்கத்தில் ஓரம் சாராது சாயாமையானது (கோணலின்றி நடுவுநிற்கும் நற்பண்பு) அறிவால் நிறைந்தோர்க்கு அழகாம்.