Kural

திருக்குறள் #112
குறள்
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து
குறள் விளக்கம்
நடுவுநிலைமை உடையவனது செல்வமானது பிறர் செல்வம்போல் அழிதலின்றி, அவனுக்கும் அவனது மக்கட் பரம்பரைக்கும் பாதுகாத்துப் பயனளிக்கும் உறுதியை உடையதாகும்.