Kural

திருக்குறள் #930
குறள்
கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணும்கால்
உள்ளாங்கொல் உண்டதன் சோர்வு
குறள் விளக்கம்
(ஒருவன்) (தான்) கள்ளுண்ணாத சமயத்தில், கள்ளுண்டு மயங்கிக் கிடப்பவனைக் காணும்பொழுது கள்ளுண்பதால் ஏற்படும் சோர்வினை எண்ணிப் பார்க்க மாட்டானா?!