குறள்
குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்னகைத்துஒன்று
உண்டாகச் செய்வான் வினை
குறள் விளக்கம்
தன் கையிலே மிகுந்த செல்வத்தை வைத்துக்கொண்டு ஒரு தொழிலினை எடுத்துச் செய்கின்றவனது செயலானது ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைகள் போர் புரிவதை வருத்தமும் பயமுமின்றி காண்பதைப் போலாகும்.