குறள்
அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு
குறள் விளக்கம்
அன்பினால் பிறக்கின்ற மற்ற உயிர்களின் துயரங்களை நீக்கும் அருள் என்று சொல்லக்கூடிய குழந்தையானது சிறப்பாகச் சொல்லும் பொருள் எங்கின்ற செல்வமாகிய செவிலித்தாயினால் நன்கு வளரக்கூடியதாகும்.