Kural

திருக்குறள் #756
குறள்
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னாத்
தெறுபொருளும் வேந்தன் பொருள்
குறள் விளக்கம்
பொருளுக்கு உரியவர் இல்லாததால் இயல்பாகக் கிடைக்கக்கூடிய பொருள்களும் வரிகளால் வரும் பொருள்களும் தன் பகைவர்களை வென்றதால் (கப்பமாக) வருகின்ற பொருளும் அரசனுக்குறிய செல்வங்களாகும்.