Kural

திருக்குறள் #755
குறள்
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்
புல்லார் புரள விடல்
குறள் விளக்கம்
அனைத்து உயிர்களிடத்தும் அருள் நிறைந்தும், அன்பு செலுத்தியும் பொருளை ஈட்ட வேண்டும். அவ்வாறு ஈட்டப்படாமல் வருகின்ற பொருள் செல்வத்தை ஏற்றுக்கொள்ளாமல் விலக்கிவிட வேண்டும்.