Kural

திருக்குறள் #744
குறள்
சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்
குறள் விளக்கம்
வாயில் வழி சிறிய காவலை உடையதாகவும் உள்ளே பரந்த இடத்தில் பெருஞ்சேனை உடையதாகவும் தன்னை வந்து சூழ்ந்த பகைவரினுடைய ஊக்கத்தை அழிக்க வல்லதாகவும் அமைந்திருப்பது அரணாகும்.