குறள்
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவைஅஞ்சு வார்
குறள் விளக்கம்
பல நூல்களைக் கற்றிருந்தாலும் அந்நூல்களின் பயனை நன்கு அறிந்திருந்தாலும் நல்லவர்கள் கூடியிருக்கும் சபையில் சொல்வதற்கு அஞ்சுபவர்கள் கல்லாத அறிவற்றவர்களைக் காட்டிலும் கீழானவர்கள் என்று உலகத்தார் கூறுவார்கள்.