Kural

திருக்குறள் #724
குறள்
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்
குறள் விளக்கம்
பல நூல்களையும் கற்று அறிந்தவரது சபையினில், தாம் கற்று அறிந்த அரிய வித்தைகளை, கற்றவர்களுடைய மனதினிலே பதியுமாறு எடுத்துக்கூறி, தாம் கற்று அறிந்ததைவிட அதிகமான வித்தைகளைத் தம்மைவிட அதிகமாகக் கற்றவரிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டும்.
குறள் விளக்கம் - ஒலி