Kural

திருக்குறள் #691
குறள்
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்
குறள் விளக்கம்
தனக்கு மாற்பட்ட கருத்துடையோரிடம் கோபம் கொள்ளும் அரசருக்கு அருகில் பணி செய்வோர் அவ்வரசரை மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் இருந்து நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல அளவான தூரத்தில் இருக்க வேண்டும்.