குறள்
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
குறள் விளக்கம்
முன் செய்த தீவினைகளால் (இப்பொழுது மேற்கொள்ளப்படும் வினைகள்) பயன்களைத் தராவிட்டாலும் (தளராமல், இடைவிடாமல் மேற்கொள்ளப்படும்) முயற்சியானது (உயிர்) தனக்கிடமாகிய உடலின் முயற்சிக்கேற்ற பயனை (உறுதியாகக்) கொடுக்கும்.