Kural

திருக்குறள் #535
குறள்
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும்
குறள் விளக்கம்
துன்பங்கள் வருவதற்கு முன்பாகவே சிந்தித்துத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளாமல் விழிப்புணர்வற்றிருப்பவன் பிறகு துன்பம் உற்ற காலத்து (பாதுகாத்துக்கொள்ள இயலாமல்) தன் கவனக் குறைபாட்டை எண்ணி வருத்தமடைவான்.