Kural

திருக்குறள் #534
குறள்
அச்ச முடையார்க்கு அரண்இல்லை ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு
குறள் விளக்கம்
அச்ச உணர்ச்சியில் ஆழ்ந்திருப்பவருக்கு எத்துணை பாதுகாப்பு அமைப்புகள் இருந்தாலும் அப்பாதுகாப்பு அமைப்புகளால் பயன் இல்லை. அதுபோல நன்றாகப் பொருளுடையவராயிருந்தாலும் மறதியை உடையவர்க்கு அப்பொருட்களால் பயன் இல்லை.