Kural

திருக்குறள் #507
குறள்
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாம் தரும்
குறள் விளக்கம்
அறியவேண்டியவற்றை அறியாதவரை அன்பின் காரணத்தால் தேர்ந்தெடுத்தல் தலைவனுக்கு அறியாமையின் விளைவாகிய துன்பமெல்லாம் வந்து சேரும்.