குறள்
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்
குறள் விளக்கம்
பெரும்படையுடைய அரசன் சிறியபடையுடையவனை அழிக்க நினைத்து சிறிய படையுடையவனுடைய ஆற்றல் நன்கு செயல்படும் இடத்தில் சென்று போரிடுவானானால் அவனுடைய பெரும்படையுடைய ஊக்கம் (பெருமை) அழிந்து போகும்.