Kural

திருக்குறள் #497
குறள்
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின்
குறள் விளக்கம்
தலைவன், பகைவன் தொழில் செய்யும் முறைகள் அனைத்தையும் குறைவு படாமல் சிந்தித்துத் தகுந்த இடத்துடன் பொருத்தமாகச் செய்தால் தனது அஞ்சாமையைத் தவிர வேறொரு துணை தேவையில்லை.