Kural

திருக்குறள் #496
குறள்
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
குறள் விளக்கம்
நிலத்தில் ஓடும் வல்லமையுள்ள சக்கரங்களையுடைய பெரியதேர் கடலில் ஓட இயலாது. கடலில் செல்லும் கப்பல்களும் நிலத்தில் ஓட இயலாது.