Kural

திருக்குறள் #472
குறள்
ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்
குறள் விளக்கம்
தனக்கு ஏற்ற செயலையும் அச்செயலுக்காக அறிய வேண்டியவற்றையும் (வலிமையையும்) நன்கு தெரிந்து கொண்டு அச்செயலினிடத்து மிகக் கவனத்துடனிருந்து செயல்புரிபவர்களுக்கு அடையாத பொருள் (இயலாதது) எதுவும் இல்லை.