Kural

திருக்குறள் #471
குறள்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
குறள் விளக்கம்
தான் செய்ய நினைக்கும் செயலின் பலத்தையும் தன்னுடைய பலத்தையும் எதிரினுடைய பலத்தையும் உதவி புரிபவர்களுடைய பலத்தையும் நன்கு ஆராய்ந்து செயல்புரிய வேண்டும்.