Kural

திருக்குறள் #383
குறள்
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு
குறள் விளக்கம்
மக்களை உடைய நிலத்தை ஆளும் நல்வாய்ப்பைப் பெற்றிருப்பவருக்கு, அதற்குரிய செயல்களில் காலம் தாழ்த்தாது விரைந்து செயலாற்றும் தன்மையுடைமை, அச்செயல்களைப் புரிந்துகொள்ளத்தக்கக் கல்வியை உடையவராயிருத்தல், முடிவெடுத்தபின் தளராது அச்சமின்றி செயலைத் திறம்பட நடத்தும் தன்மை உடைமை எனப்படும் இம்மூன்று பண்புகளும் நீங்காது இருத்தல் வேண்டும்.