குறள்
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு
குறள் விளக்கம்
உள்ளத்தை உடைய உயிர் தெளிவாக அறியும் பொருட்டு தக்க சான்றுகளால் ஆராய்ந்து உள்ளதை (உள்ளவாறு) உணர்ந்துகொள்ளுமாயின் மீண்டும் மற்றொரு உடலில் புகுதலானது மாறி (திரும்பத் திரும்ப வருமோ எனக்) கருத வேண்டியதில்லை.