குறள்
கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி
குறள் விளக்கம்
இந்த மனிதப்பிறவியில் உண்மைப்பொருளை (மெய்யறிவை முறையாகப் புகட்டும் தகுதியையுடைய ஆசிரியரிடத்தில் முறைப்படி) கேட்டறிந்து அறிவாகிய கண்ணால் உய்த்துணர்ந்தவர் மீண்டும் உடலில் புகாத நிலையை அடைந்தே விடுவர்.