Kural

திருக்குறள் #340
குறள்
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு?
குறள் விளக்கம்
நிலையற்ற இருப்பிடமாகிய வாடகை வீடுகளாகிய நோய்க்கு இலக்காகும் உடம்புகளுள் இருந்துவரும் உயிருக்கு நிலையான இருப்பிடம் (சொந்தவீடு) இதுவரை அமையவில்லை போலும்.