குறள்
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
குறள் விளக்கம்
நெய் முதலிய வேள்விப் பொருட்களை நெருப்பில் இட்டு ஆயிரம் யகம் செய்வதைக் காட்டிலும், ஓர் உயிரை உடலிலிருந்து நீக்கி அவ்வுடல் தசைகளைப் பக்குவப்படுத்தி உண்ணாமல் இருப்பது சிறந்த அறமாகும்.