குறள்
நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்எனினும் ஈதலே நன்று
குறள் விளக்கம்
பிறர் தரும் பொருளைப் பெற்றுக்கொள்வதானது சிறந்தவழி என்றாலும் மற்றவர் தருவதை ஏற்பது குறைபாடுடையதுதான். (கொடுப்பவருக்கு) சிறந்ததான வீடுபேறு கிடைக்காது என்றாலும் இரக்கத்துடன் கொடுப்பதே நல்லது (மனநிறைவைடத் தருவதாகும்).