குறள்
அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை
குறள் விளக்கம்
அறம் (என்று ஒன்றுமில்லையென்று), (அறத்தை) பழித்துப் பேசுதல் (மற்றும்) அறத்திற்கு மாறான பாவங்களைச் செய்வதைக் காட்டிலும், ஒருவனைக் காணாதபோது அவனைப் பழித்துப் பேசி, (அவனைக் கண்டபோது) அவனுடன் பொய்யாக முகம் மலர்ந்து பேசும் செயல் பெருந்தீமையாகும் (பாவமாகும்.)