குறள்
எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
குறள் விளக்கம்
பணிவாகிய பண்பு அனைவருக்கும் நன்கு இன்பந்தரும். அவ்வனைவரிலும் செல்வம் உடையவர்களுக்கே (பணிவாகிய பண்பு) அச்செல்வந்தத் தன்மைக்கு நன்கு பெருமை சேர்க்கும் சிறந்த செல்வமாகும்.