குறள்
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்
குறள் விளக்கம்
ஒருவன், தனது மனம் நடுவுநிற்றலை நீங்கி நடுவு நிற்றல் அல்லாதனவற்றை (பாவச்செயல்களை) செய்ய நினைக்குமாயின் (அந்நினைவே) நான் கெடப்போகிறேன் என, பின்வருவதை முன்னமேயே உணர்த்தும் அடையாளமாக அறிந்து கொள்வானாக.