Kural

திருக்குறள் #107
குறள்
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு
குறள் விளக்கம்
அறிவுடைய நல்லோர் தங்களிடத்துத் தோன்றிய துயரத்தை நீக்கியவரின் நட்பினை வினைப்பயனால் எழுகின்ற ஏழுவகையான பிறப்பிலும் நினைத்துப் பார்ப்பார்கள்.
குறள் விளக்கம் - ஒலி