குறள்
உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம்
தொழுதுஉண்டு பின்செல் பவர்
குறள் விளக்கம்
(யாவரும் உண்ணும்படி) உழுதலைச் செய்து (அதனால் தாமும்) உண்டு வாழ்பவரே தமக்குரியவராய் வாழ்பவர். பிற தொழில்களைச் செய்கின்ற எல்லோரும் (பிறரை)த் தொழுது (அதனால், தாம்) உண்டு அவரைப் பின் தொடர்பவர் ஆவர்.