Kural

திருக்குறள் #1003
குறள்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
குறள் விளக்கம்
பொருளைச் சேர்த்து வைப்பது ஒன்றையே விரும்பி (அதனை வறியவருக்கு வழங்குவதால் கிடைக்கும்) புகழை விரும்பாத மனிதர்கள் பிறப்பானது பூமிக்கு பாரமாகும்.